பக்கம்:இன்ப வாழ்வு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலன் தேவையா?

மெண்களைப் போலவே ஆண்களும் முகப்பூச்சு (Face Powder) பூசிக் கொள்ளும் இவ்வியத்தகு காலத்தில், பெண்களுக்கு நகைப்பித்து எங்கே குறையப் போகிறது? இன்னும் ஆண்களுக்கே குறையவில்லையே! ஆனால் அணிகலன்கள் அணிந்து கொள்வது தேவை தானா? அணியாது வாழமுடியாதா? இவ்வினாவிற்கு விடைவேண்டும். சீர்திருத்த விஞ்ஞான காலம் எனப்படும் இந்தக் காலத்துக்கு இரண்டாயிாம் ஆண்டுகட்கு முன்னரே ஒருவர் இந்த வினாவிற்கு விடையளித்துள்ளார். அந்தச் சீர்திருத்தக்காரர் யார்? வள்ளுவர்தான்! தான் கண்டு காதலித்த காதலியை நோக்கிக் காதலன் சொல்வதாக வள்ளுவரால் இயற்றப்பெற்ற ஒரு குறளை ஆய்ந்தால் உண்மை புலனாகும். அக்குறள் வருமாறு:

‘பிணையேர் மடகோக்கும் கானு முடையாட்

கணினவனோ ஏதில தக்து.’

(பதவுரை) பிணைஏர் - பெண்மானைப் போன்ற, மடநோக்கும் - மருண்ட பார்வையும், நாணும் நாணமும், உடையாட்கு - இயற்கையாய் 9-60Lúl இந்தப் பெண்ணுக்கு ஏதில தந்து அணி எவனோ? - அயலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/145&oldid=550717" இலிருந்து மீள்விக்கப்பட்டது