பக்கம்:இன்ப வாழ்வு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இன்ப வாழ்வு


புடையன. அகத்தில் நாணம் இருந்தால்தான், முகத்தில்கண்ணில் மடநோக்கு இருக்கமுடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா? அகத்தில் நாணம் இல்லாத காளிகளுக்கு-உள்ளத்தில் கூச்சம் இல்லாத பேய்பிசாசு-பிடாரிகளுக்கு மடநோக்காவது மண்ணாங்கட்டி யாவது!

எனவே, உலக மக்களே! இரவல் நகை கூடாது; சொந்த நகையே போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரவல் நகை என்றால், ஒருவன், நகையில்லாத தன் மனைவிக்குப் போடுவதற்காக, நகை வைத்திருக்கின்ற மற்றொருவனிடம் சென்று மானமின்றி-தன் கையாலாகாத் தனத்தைத் தானே வெளிப்படையாய் ஒத்துக் கொள்பவன் போல இரவல் கோட்கிறானே, அந்த இரவல் நகையைக் குறிப்பிடவில்லை. ஒருவன், தன் மனைவிக்கு நல்நோக்கும் நாணமுமாகிய நகைகளுக்குப் பதிலாக, தன் சொந்தப் பணத்தில் தானே வாங்கிப் போட்டுள்ள சொந்த நகையைத் தான் இரவல் நகை என்று சொல்கிறேன் நான். இல்லை மன்னிக்கவும்! இவ்வாறு நான் சொல்லவில்லை. வள்ளுவர் தான் சொல்லியிருக்கிறார் அணி எவனோ ஏதில’ என்று இங்கே ஏதில’ என்றால் அயலானவை-இரவலானவை என்று பொருளாம். ஏதிலான் என்றால் அயலான்; ஏதில என்றால் அயலானவை. எனவே, மட நோக்கும் நாணமுமே சொந்த நகைகள்; தலைமகளுக்கு அவைகளே போதும், என்கிறான் தலைமகன்.

மேலும், அணி எவனோ? என்று அங்கலாய்க் கின்றான் தலைமகன். எவன் என்றால் ஏன்-எதற்கு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/147&oldid=550719" இலிருந்து மீள்விக்கப்பட்டது