பக்கம்:இன்ப வாழ்வு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இன்ப வாழ்வு


இந்தக் குறளிலிருந்து, குறிப்பாகப் பெண்மணிகள்அவருள்ளும் சிறப்பாகச் செல்வ மங்கையர் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன? ஆடவர்கள் அவர்தம் செல்வத்தின் அளவை அறிவிக்கும் விளம்பர வண்டியாகத் தங்களைப் பயன்படுத்திக் கொள்ள இடந்தரலாகாது. நாங்களென்ன அலங்காரப் பதுமைகளா? அல்லது சுமை தாங்கிகளா? என்று ஆடவரைக் கேட்கவேண்டும். ஆனால் ஆடவர் நகை வாங்கிப் போடாவிட்டால், போடும்படி அவர் களை வற்புறுத்துகின்ற மங்கையர்க்கு நமது இரக்கம் உரித் தாகுக!

கந்தமிழ் மக்கள் செய் கல்லதொரு திருமணத்தில் செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானை செந்தழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின் வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானை வந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை

தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத் தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதிகாண் அம்மானை தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதியாம் என்பதைகம் தமிழ்க்கிழவர் சிலரின்று தடுக்கின்றா ரம்மானை தடுப்பவரை மணமக்கள் தடுக்க வேண்டும்

அம்மானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/149&oldid=550721" இலிருந்து மீள்விக்கப்பட்டது