பக்கம்:இன்ப வாழ்வு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இன்ப வாழ்வு


என்பது, கண்ட அளவில் மனத்தால் கூடுதல். மெய்யுறு புணர்ச்சி என்பது உடல் தொடர்பு. எனவே காமம் என்பது கண்டார்கண்ணும் மகிழச் செய்யும். கள்ளைப் போல உண்டார்கண்ணும் அதாவது உடலோடு தொடர்பு கொண்டார் கண்ணும் மகிழச் செய்யும். ஆகவே, உண்டார்கண் மட்டும் தொடர்பு கொள்ளும் கள்ளைவிட, கண்டார் கண்ணும் தொடர்பு கொள்ளும் காமம் உயர்ந்த தென அவன் புகழ்ந்துள்ளான். அவன் இப்பொழுதுதான் அவளை முதல் முதல் கண்டு காதலித்து உள்ளப்புணர்ச்சிக் கட்டத்தை அணுகியிருக்கிறானன்றோ? ஐம்முயற்சிகளுள் எளிதான காணுதலைக் கொண்டே, ஐம் முயற்சிகளுள் அரிதான உண்ணுதலுக்கு மேலே போய் விட்ட அவன், ஏன் சொல்லமாட்டான் ‘உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ் செய்த லின்று’ என்று! ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’ எனப் பெரிய புராணத்தில் சேக்கிழார் கூட மொழிந்துள்ளாரே. ஆனால் அது பேரின்பத்துக்கு இக் குறளோ சிற்றின்பத்துக்கு!

இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில் பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானை பிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோ பிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானை பிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/155&oldid=550728" இலிருந்து மீள்விக்கப்பட்டது