பக்கம்:இன்ப வாழ்வு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இன்ப வாழ்வு


‘மருந்தின் தீராது மணியின் ஆகாது

அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய தேனிமிர் கறவின் தேறல் போல தேர வந்த கிறையழி துயரம்கின் அருளின் அல்லது பிறிதின் தீராது.”

(நறவின் தேறல் = மது; நீ என்றது தலைமகளை) என்னும் பாடற் பகுதியோடு ஒத்திட்டு நோக்கி மகிழ்க! எனவே தலைமகளது நோக்கம், பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது என்பது புலனாகும். உண்மையில் அவ்வாறு செய்யவேண்டும் என்பதா அவளது நோக்கம்? இல்லை. அவளது பார்வை யிலே உள்ள கவர்ச்சி இயற்கையாய் அவனது காமநோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கிறது. அவ்வளவுதான்! நாடகத்திலே கூத்தடிக்கிறார்களே, அவ்வாறா நம் வள்ளுவர் படைப்பாகிய தலைமகள் நடந்து கொள்வாள்? இல்லை; அவள் நாணமுடையவளாதலின், கண் வீச்சிலே காதலைச் சொரிகிறாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்கிறான் அவன். எத்துணைஇனிய குறள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/159&oldid=550732" இலிருந்து மீள்விக்கப்பட்டது