பக்கம்:இன்ப வாழ்வு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இன்ப வாழ்வு


இன்று காணப்படுகின்ற இழிநிலைக் காம உணர்ச்சி மாறும், மணவிலக்குக் குறைந்து மறையும். ஒருவனுக்கு ஒருத்தி-ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய இன்ப வாழ்வு முறை உலகெங்கணும் நின்று நிலைக்கும். அதற்கு வழி கோலுகிறது வள்ளுவரின் காமத்துப்பால். இதனினும் இவ்விருபதாம் நூற்றாண்டில் செய்ய வேண்டிய தலையாய பணி வேறு யாதோ? வீடு திருந்தின் நாடு திருந்தாதா? இனி காமத்தைப் பற்றிச் சிறிது ஆய்வாம்:

காம உணர்வு பசியுணர்ச்சியைப்போன்ற தொன்றாகும். ஆயினும், அவ்வளவு கொடிய தன்று; அதற்கு அடுத்த வரிசையில் நிறுத்தலாம். பசியில்லாதவரிலர்; காமம் இல்லாதவரும் இலர். பசியை ஒழித்தவரிலர்; காமத்தை ஒழித்தவரும் இலர். பசியை எவராலும் ஒழிக்கவும் முடியாது; காமத்தையும் எவராலும் ஒழிக்கவும் முடியாது. எந்தத் துறவியாயினும், மணமாகாத எந்த ஆண் பெண்ணாயினும் காமத்தை ஒழிக்கவே முடியாது. இதனை நாற்பதாயிரம் கோயில்களில் சொல்லலாம். இதனால், துறவியரையோ, மணமாகாதோரையோ பழிப்பதாகப் பொருளன்று. அவர்களுட் பலர் களங்கமிலாதவர்-மாசு மறுவற்றவர். அங்ஙனமெனின், இதில் பொதிந்து கிடக்கும் உண்மை யாது?

பசியை இனி வராதபடி ஒழிக்க முடியாது; ஆனால் அடக்க முடியும். சினத்தை இனி எழாதபடி ஒழிக்க முடியாது; ஆனால் வந்த சினத்தை அடக்கி வெல்ல முடியும். அதுபோலவே காமத்தையும் ஒழிக்க முடியாது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/161&oldid=550735" இலிருந்து மீள்விக்கப்பட்டது