பக்கம்:இன்ப வாழ்வு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

161


அதனை அடக்கியாண்டு வெற்றிபெற முடியும். ஒரு சில பேடிகளிடத்தே அஃது ஒடுங்கி உறக்கத்திலாழ்ந்துள்ளது. இது விதி விலக்கு. அதனாலேயே இது பசிக்கு அடுத்தபடி எனச் சொல்லப்பட்டது.

இவ்வுணர்ச்சிகள் எல்லாம் எல்லாருக்கும் உண்டு. இவற்றை உளநூலார் (Psychologist) இயல்பூக்கங்கள் (Instincts) என்கின்றனர். இவை சூழ்நிலைத் தொடர்பால் சிலரிடத்தே அடக்கமாகவும் சிலரிடத்தே முனைப்பாகவும், சில நேரத்திலே அடக்கமாகவும் சில நேரத்திலே முனைப் பாகவும் இருப்பதுண்டு. இவற்றை இவற்றின் போக்கிலேயே விட்டுவிடாமல், நேரிய-தூய பாதையில் திருப்பிச் செலுத்தவேண்டும். அவ்வாறு செய்வதைத்தான் “தூய்மை செய்தல்’ (Sublimation) என உளநூலார் குறிக்கின்றனர். இதைத்தான் கற்பிக்கின்றது திருக்குறள்.

பசியெடுத்தால் நமது உணவை உண்கின்றோம். பிறருணவை அவர் அறியாமல்-அவர் விரும்பாமல் வலிய உண்பதை இழிவாகக் கருதுகிறோம். காமமும் அது போலவே கருதப்படவேண்டும். வருந்தி யழைத்தாலும் விருந்துக்குச் செல்லாத பெரிய மனிதர் சிலர் பிறர் பெண்களை விரும்புகின்றனர். இந்நிலையைச் சாடி, உண்மைக் காதல் வாழ்வை உலகிற்கு வற்புறுத்துவதே வள்ளுவரின் காமத்துப்பால்! இதை மெய்ப்பிக்கக் காமத்துப் பாலிலுள்ள சில கருத்துக்களைக் காண்பாம்:

ஒரு தலைவன் தன் தலைவியை மிகவும் மதிக்கிறான்விரும்புகிறான். அவளை விட்டுப் பிரிய அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/162&oldid=550736" இலிருந்து மீள்விக்கப்பட்டது