பக்கம்:இன்ப வாழ்வு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இன்ப வாழ்வு


ஆதலின் நீ இடத்தைக் காலி செய்துவிடு’ என்று அறிவிப்பு (நோட்டீசு) கொடுக்கிறான். என்னே இவனது காதல்! இந்தக் கருத்தை,

‘கருமணியில் பாவாய் நீ போதாய் யாம் விழும்

திருநுதற்கு இல்லை இடம்.’ (பாவாய் - பாவையே = பாப்பாவே, போதாய் - போவாய், வீமும் அ விரும்புகிற, திருநுதல் = அழகிய நெற்றியை உடைய பெண் - தலைவி.) என்னும் குறட்பாவால் அறிந்து இன்புறலாம். தலைவன் தன் கண்ணின் கருமணியின் பாப்பாவினும் சிறந்தவளாகத் தலைவியை மதிக்கிறான் என்றால் இதற்குப் பொருள் என்ன? கண் தெரிந்தாலும் தலைவியில்லாவிடின் வாழ முடியாது; கண் தெரியாவிடினும் தன் தலைவியிருந்தால் தனக்கு எல்லா வாழ்வும் கிடைக்கும் என்று தன் தலைவியை நம்புகிறான் - மதிக்கிறான் - விரும்புகிறான் என்று புரியவில்லையா? அதற்கேற்ற பண்பினை அவளிடம் கண்டதனால்தானே அவளை அந்த அளவுக்கு மதித்திருக் கிறான். உலகில் ஒவ்வொருவரும் இவ்வாறு நடந்து கொண்டால் குடும்பத்தில் பிணக்கு இருக்குமா?

இதுவரையும் தலைவனது அன்பின் எல்லையைக் கண்டோம். தலைவியோ தலைவனை விட சில படிகள் மேலே சென்று விட்டாள். அவளும் தலைவனைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்பினாள். தலைவன் தலைவியைத் தங்க வைப்பதற்குப் புற உறுப் பாகிய கண்ணைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் அவளோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/165&oldid=550739" இலிருந்து மீள்விக்கப்பட்டது