பக்கம்:இன்ப வாழ்வு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

கற்பிக்கும் முறை, மாணவர் கடமை, ஆசிரியர் கடமை, பெற்றோர் கடமை, கற்றோர் கடமை முதலிய பல்வகைக் கருத்துக்கள், பழந்தமிழர் நூற்கள் பலவற்றின் துணை கொண்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன. தமிழர் கண்ட கல்விக் கொள்கைகளின் களஞ்சியமாகிய இந்நூல் கையிலிருப்பின் சீரிய வாழ்க்கைக்கு உதவுவது அல்லாமல், சொற்பொழிவு ஆற்றுவதற்கும், கட்டுரை வரைவதற்கும், ஆராய்ச்சி நூல் வெளியிடுவதற்கும் பெருந்துணை புரியும்.

5. தமிழ் அகராதிக்கலை அகராதிக்கலை எழுதி அழியாப் புகழ் பெற்றவர்’ என்னும் சிறப்பினை இவருக்குப் பெற்றுத் தந்த ‘தமிழ் அகராதிக்கலை 524 பக்கங்கள் கொண்டது. இந்நூல் ஐந்து பாகமாகப் பகுத்து எழுதப் பட்டுள்ளது. இந்நூலில் தமிழ் அகராதிக் கலையின் வரலாற்றாராய்ச்சி, நிகண்டுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் சொற்பொருள் பற்றிய மொழியாராய்ச்சி அமைக்கப் பட்டுள்ளன. நூலைப் பற்றிய மதிப்புரைகள்:

சுதேசமித்திரன் நாளிதழ் ஆராய்ச்சி அடிப்படையில் படைக்கப்பட்டுள்ள இவ்வரிய நூல் புத்தம்புதியதொரு நன்முயற்சியாகும். தமிழகம் இவ்வரிய ஆராய்ச்சி நூலை வரவேற்றுத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புவோமாக,

மூதறிஞர் இராஜாஜி: You தமிழ் அகராதிக்கலை is a most informative and useful publication. I congratulate you on this valuable production.

முனைவர் மு. வரதராசனார். இவ்வாராய்ச்சி நூலில் விரிவாகப் பற்பல குறிப்புகளை உதவியுள்ளார். ஆசிரியரின் உழைப்பும் ஆராய்ச்சித் திறனும் பாராட்டுக்குரியன.

டி என். சு.கி. சுப்பிரமணியம்: இந்த நூல் அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனி மனிதனின் உழைப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/173&oldid=550748" இலிருந்து மீள்விக்கப்பட்டது