பக்கம்:இன்ப வாழ்வு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

173


களஞ்சியம். தமிழ்மீது ஆராய்ச்சி செய்த புலவர் பெரு மக்களுள் இந்நூலாசிரியர் தனித்தன்மை பெற்று நிற்கிறார். முனைவர் மா. இராசமாணிக்கனார்: அரிய செய்திகள்புதிய செய்திகள் - மிகுந்த உழைப்பு - ஆழ்ந்த புலமை - மிகவும் அரிய முயற்சி - உண்மை - வெறும் புகழ்ச்சி யில்லை, .

6. தமிழ் இலத்தீன் பாலம் 338 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆசிரியரின் ஐம்பதாவது வெளியீடு ஆகும். இந் நூலில் தமிழ் மொழிக்கும் இலத்தின் மொழிக்கும் பாலம் போல் தொடர்பாக உள்ள செய்திகள் குறித்து நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார்.

7. கெடிலக்கரை நாகரிகம்: 51 படங்களுடன் 650 பக்கம் கொண்ட இப்பெரிய நூல் ஆசிரியரின் மற்றுமொரு புகழ் பெற்ற நூலாகும். இந்நூலில் கெடிலக்கரையில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பழகிய ஆசிரியர் கெடிலக் கரை நாடு பற்றிப் பல்லாண்டுகள் நேரில் பார்த்துப் பட்டறிந்த செய்திகளையும், படித்தறிந்த செய்திகளையும், கேட்டறிந்த செய்திகளையும் தனக்குத் தோன்றிய சில ஆராய்ச்சி முடிவுகளையும் இணைத்துத் தந்துள்ளார்கள்.

8. தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்: டெம் மி சைசில் 824 பக்கங்கள் கொண்ட இந்நூல் சுந்தர சண்முகனார் எழுதிய நூல்களிலேயே மிகப் பெரியதாகும். இந்நூல் தமிழில் வெளி வந்துள்ள தொகை நூல்களைப் பற்றிய ஆய்வு ஆகும். இதற்கு மதிப்புரை வழங்கிய முனைவர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் இந்நூல் தமிழுல கிற்குப் புதியது, தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாவது, தமிழாராய்ச்சிக்கு வழிகாட்ட வல்லது என்று குறிப் பிட்டுள்ளார். இந்நூலைப் பற்றித் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் துரை மோகன் அரங்கசாமியவர்கள் எழுதியது. “...என்ன அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/174&oldid=550749" இலிருந்து மீள்விக்கப்பட்டது