பக்கம்:இன்ப வாழ்வு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

வாதம்; எவ்வளவு கருத்தினிமை செறிந்த நடை; எத்தகைய வியப்பிற்குரிய சிறந்த உழைப்பு; என்ன மேதைமை; என்ன ஆழம்; என்ன பரப்பு; தங்களை நாங்கள் பெற்றது எங்கள் பாக்கியம். தேர்ந்த ஆய்வியல் அறிஞராகிய தாங்கள் திருவேங்கடவன் தமிழ்த்துறையைத் தங்கள் அன்பிடமாகக் கொண்டு என்றும் இங்கே வரலாம். எங்களால் இயன்ற வற்றைத் தங்கள் பணியாட்கள் போலச் செய்வோம்’.

9. உலகு உய்ய: இந்நூலை உலக அமைதி ஆண்டு (1987) வெளியீடாக ஆசிரியர் வெளியிட்டு, இவ்வளவு நாள் தமிழ் அறிந்தவர்கட்கு மட்டும் நூல் எழுதினேன். இப்பொழுது உலகினர்க்கு நூல் எழுதியுள்ளேன் என்று நூல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலுக்கு தினமணியில் வந்த மதிப்புரையிலிருந்து. ஆசிரியரின் பரந்து பட்ட பட்டறிவு பக்கந்தோறும் பளிச்சிடுகிறது. தமிழுக்கு இஃது ஒர் புதுவரவு.

10. வள்ளுவர் இல்லம்: இந்நூல் திருக்குறளின் அறத்துப் பாலில் உள்ள இல்லறவியல் பற்றிய ஆய்வு நூலாகும். தினமணியில் வந்த மதிப்புரையிலிருந்து ஒரு பகுதி. குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், விளக்கக் கட்டுரைகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால் புலவர் சுந்தர சண்முகனாரின் விளக்கமும் நடையும் அறிவுக்கு விருந்தாவதொரு தனி வழியாகும். ஆராய்ச்சித் திறனும் கலையும் ஆதரிப்பாரின்றித் தமிழ் நாட்டில் சாகாமல் இருக்க வேண்டுமானால் இம் மாதிரி நூல்களுக்குத் தமிழர் ஆதரவு அவசியமாகும்.

11. கெளதமப் புத்தர் காப்பியம்: நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து “இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரம் -.மணிமேகலை, ஆகியவை போலவும், எனது அம்பிகாபதி காதல் காப்பியம் போலவும், இந்தக் காப்பியத்தையும் முப்பது காதைகள் உடையதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/175&oldid=550750" இலிருந்து மீள்விக்கப்பட்டது