பக்கம்:இன்ப வாழ்வு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

சுந்தர சண்முகனார் அவர்கள் நீண்ட நாட்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூல் வடிவில் தமிழ் அறிந்த மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். முத் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததொரு திறனாய்வு நூல், ஒரு புதுப் படைப்பிலக்கியம் போலவே படைக்கப்பட்டுள்ளது. இனிய எளிய நகைச்சுவை கலந்த தமிழில் சிலப்பதிகாரத் திற்குக் கிடைத்துள்ள சிறந்த இந்த ஆய்வு நூலைப் படிப்பவர்கள் சிலப்பதிகாரம் முழுவதையும் படித்துச் சுவைக்க வேண்டுமென்று ஆவல் கொள்வார்கள் என்பது உறுதி.

15. கந்தரகாண்டச் சுரங்கம்: இந்நூல் ஆசிரியருக்குக் கம்பராமாயணத்தில் மிகவும் பிடித்த சுந்தரகாண்டம் பற்றியத் திறனாய்வு நூலாகும். நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறியுள்ளதாவது: ‘கம்பராமாயணம் மிகவும் சிறந்த கருத்துகள் அடங்கிய ஒரு சுரங்கம்; அதிலும், சுந்தரகாண்டம் மிக உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கிய மாபெருஞ் சுரங்கப் பகுதியாக உள்ளது. அந்தச் சுரங்கத்திலிருந்து சில கருத்துப் பொருள்களை எடுத்து விளக்கி அக் கருத்துப் பொருட்கட்கு இந்நூல் வடிவம் தந்துள்ளேன்’ ஆசிரியர் சுந்தரகாண்டத்தைத் தொடர்ந்து அயோத்யா காண்டம், பால காண்டம், கிட்கிந்தா காண்டம் மற்றும் ஆரணிய காண்டங்களுக்கும் தனித் தனியே திறனாய்வு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/177&oldid=550752" இலிருந்து மீள்விக்கப்பட்டது