பக்கம்:இன்ப வாழ்வு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

33


தலைவியோடு களித்து மகிழ்ந்த தலைவனொருவனது தோற்றத்தின் மாறுதலைக் கண்ட தோழனொருவன் அதற்குக் காரணம் வினவுகிறான்: “தலைவா! உன் தோற்றத்தில் மாறுதல் தெரிகிறதே! காரணம் என்ன? மதுரையில் கடவுளும் சங்கத்தில் சேர்ந்து ஆராய்ந்து நுகர்ந்த தமிழின்பத்தை நீயும் ஆராய்ந்து பெற்று நுகர்ந்தாயா? அல்லது ஏழிசை வெள்ளத்துள் முழ்கினாயா?” என்று தோழன் தலைவனை வினவினான். இதனை, ‘சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும்

என் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த

ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ ஏழிசைச்

சூழல் புக்கோ இறைவா தடவரைத்தோட் கென்கொலாம்

வந் தெய்தியதே!’ என்னும் திருக்கோவையார்ச் செய்யுளால் தெரிந்து கொள்ளலாம். இதனாலும், தமிழின்பம் சிற்றின்பத்திற்குச் சிறிதும் குறைந்ததன்று - பெரிதும் உயர்ந்ததே என்பது பெறப்படுமே!

எனவே, சிற்றின்பத்திற்கோ அல்லது மற்ற இன்பத் திற்கோ எவ்வகையிலும் குறையாத இன்பத் தமிழை இளைஞர் முதல் முதியோர்வரை எல்லாருமே கற்றுக் களித்துச் செம்மாந்து சிறக்கலாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/34&oldid=550764" இலிருந்து மீள்விக்கப்பட்டது