பக்கம்:இன்ப வாழ்வு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

35


வாழ்க்கையில் கணவன் யார்-மனைவி யார் என முதலில் கண்டு பிடித்தாக வேண்டும். பிறகு பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாகப் புலவர்கள் சிலர் மலரை மனைவியாகவும்,

ஞாயிறு (சூரியன்) அல்லது திங்களை (சந்திரன்) கணவனாகவும் உருவகித்துப் பாடுவதுண்டு. காட்டாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சூரியகாந்தி மலரை நோக்கி,

‘ஆகாய வீதி உலாவிவரும் இந்த

ஆதித்தனோ உனது அன்பனடி! வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ

விண்ணிலே கண்ணாக நிற்ப தேனோ? காயும் கதிரவன் மேனியை நோக்க-உன் கண்களும் கூசிக் கலங்காவோ? நேயம் மிகுந்தவர் காய வருத்தம்

நினைப்பதும் இல்லையோ? சொல் அடியே! செங்கதிர் செல்லும் திசையது நோக்கி - உன்

செல்வ முகமும் திரும்புவ தேன்? மங்கையே உன் மணவாளனாகில்- அவன்

வார்த்தை யொன்றும் சொல்லிப் போகானோ? ஆசை கிறைந்த உன் அண்ணலை நோக்கிட ஆயிரம் கண்களும் வேண்டு மோடி? பேசவும் நாவெழ வில்லையோடி! கொஞ்சம்

பீத்தல் பெருமையும் வந்த தோடி? மஞ்சள் குளித்து முகமினுக்கி-இந்த மாயப்பொடி வீசி நிற்கும் நிலை கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?

கண்ணிர் உகுக்குமோ? யாரறிவார்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/36&oldid=550766" இலிருந்து மீள்விக்கப்பட்டது