பக்கம்:இன்ப வாழ்வு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இன்ப வாழ்வு


போன்ற ஒரு பாகம் உள்ளது. அதில், குழாய் போன்றும் ஊசி போன்றுமாக இரண்டு உட்பிரிவுகள் உண்டு. குழாய் போன்றது ஊசிபோன்றதைச் சுற்றிக்கொண்டிருக்கும். இந்தக் குழாயின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கிற நூல் போன்ற கம்பிகளின் நுனிகளில், மஞ்சள் நிறமுடைய சிறுசிறு உருண்டைகள் இருக்கும். இக்குழாய் கேசரக் Gymü’ (Stam1nal tube) Tárgyú), Uģ5 år sp உருண்டை மகரத்தப்பை (Anther) என்றும் அழைக்கப்படும். கேசரக் குழாய்க்குள் உள்ள கம்பி “கீலம்’ (Style) எனப்படும். கீலத்தின் நுனிப்பகுதி “கீலாக்ரம்’ (Stigma) அல்லது கீல நுனி எனப்படும். கீலம் அடியில் பிஞ்சுடன் தொடர்புற்றிருக்கும். இந்தப் பிஞ்சு ‘அண்டாசயம் (Oway) எனப்படும். இந்தக் கீலம், கீலாக்ரம், அண்டாசயம் ஆகிய மூன்றும் சேர்ந்து ‘அண்டகோசம்’ (Gynaecium) என்றழைக்கப்படும். பூவில் காயாக மாறும் பகுதி இந்த அண்டகோசம்தான். எனவே, இதனைப் பூவின் பெண்பாகம் என்று கூறலாமன்றோ? கேசரப் பகுதியிலுள்ள மகரந்தப் பையில் இருக்கிற மகரந்தப்பொடி (Pollen) என்னும் பூந்தூள், அண்ட கோசத்துள் விழுந்து தொடர்பு கொண்டால்தான் காய் உண்டாகுமாதலால், அம்மகரந்தப் பொடி உள்ள கேசரப் பகுதியைப் பூவின் ஆண்பாகம் என்று சொல்லலாமன்றோ?

இணையினப் பூஞ்செடிகள்

பூவரசில் ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் இரண்டும் உள்ளன. சப்பாத்தி. அகத்தி முதலியவற்றிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/41&oldid=550772" இலிருந்து மீள்விக்கப்பட்டது