பக்கம்:இன்ப வாழ்வு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இன்ப வாழ்வு


எனவே, மலர்கள் பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. ஒரு பூவின் பெண் பாகத்தில் வேறு மலரிலுள்ள ஆண் பாகமாகிய மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வண்டு, தேனி, வண்ணாத்திப்பூச்சி முதலியவை செய்கின்றன. இவ்வாறு பிறமகரந்தச் சேர்க்கையால் கருவுறும் மலர்கள் மிக்க மணமும், நிறமும், தேனும், தோற்றக் கவர்ச்சியும் உடையனவாக இருக்கும். இவ்வகை மலர்கள் மணமும் நிறமும் கவர்ச்சியும் பெற்றிருப்பது வண்டு முதலியன வற்றைக் கவர்ந்து மயக்கித் தம்பால் இழுப்பதற்கேயாம். அதற்காகத் தேனும் கொடுக்கப்படுகிறது. வண்டு முதலியன ஒரு மலரில் தேன்குடிக்கும்போது அதிலுள்ள மகரந்தத் துணுக்குக்களைத் தம்மேல் ஒட்டிக்கொண்டு, வேறொரு மலரில் சென்று அத்துணுக்குக்களைத் தற்செயலாகச் சேர்க்கின்றன. மலர்களிடம் கவர்ச்சியில்லையென்றால் வண்டுகள் அவற்றை நோக்கிச் செல்லமாட்டா அல்லவா?

‘மஞ்சள் குளித்து முகம்மினுக்கி-இந்த

மாயப்பொடி வீசி கிற்கும் கிலை’

என்று கவிமணியவர்கள் சூரிகாந்தியைப்பற்றிக் குறிப்பிட்டி ருப்பது, உண்மையில் சூரியனை மயக்குவதற்கன்று; வண்டுகளை மயக்கி வரவேற்பதற்கேயாம். இதனை அவரே மற்றொரு பாடலில் மலர்களின் வாயில் வைத்து,

‘வண்டின் வரவெதிர் பார்த்து கிற்போம்-கல்ல

வாசனை வீசி கிற்பேம்’

என்று கூறியிருப்பதனாலும் உணரலாம். மற்றும் பொழுது சாயும் மாலை வேளையில் மலரும் முல்லை முதலிய மலர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/45&oldid=550776" இலிருந்து மீள்விக்கப்பட்டது