பக்கம்:இன்ப வாழ்வு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இன்ப வாழ்வு


மலர்களை மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்குமாம். அதே போல மந்தாரையில் தேன்குடித்த வண்டு தொடர்ந்து மந்தாரையையே தேடித் திரிந்து தேன் குடிக்குமாம்? ஆகா, இயற்கையின் வியத்தகு செயலை என்னென்பது! மலர் களின் காதல் வாழ்க்கைக்கு இயற்கை எப்படியெப்படி யெல்லாமோ உதவுகின்ற தல்லவா?

மேலும், பெண் மலர்கள் ஆண் மலர்களின் கூட்டுறவைத் தவங்கிடந்து பெற்றுக் கருவுற்று இன வளர்ச்சி செய்வதோடல்லாது, காயாகிக் கனியாகிப் பிற உயிரினங்கட்கும் உதவி ஒப்புரவு செய்து வாழும் மனையறத்தை எண்ணுங்கால் மயிர்க்கூச் செறிகின்றது. இங்கே, நாம் உண்ணும் நெல், கேழ்வரகு முதலிய வற்றின் வாழ்க்கையைச் சிறிது நினைத்துப் பார்ப்போம். இவற்றின் பூக்கதிர்கள் தலைக்குமேல் மிக உயர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் என்ன? தாங்கள் அடர்த்தியாக நெருங்கி வாழ்வதால், பூக்கதிர்கள் அடியிலோ நடுவிலோ ஏற்படின், பிறமகரந்தச் சேர்க்கைக்குப் போதிய வசதியிராது. அதனாலேயே, பூக்கதிர்களைத் தலைக்குமேல் மிக நீட்டிக்கொண்டு பிறமகரந்தச் சேர்க்கையை எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றன. என்னே இந்தச் செயல்!

மற்றும், தண்ணீருக்குள் வாழும் வேலம்பாசி என்னும் ஒருவகைச் செடியின் காதல் வாழ்வை ஆராய்ந்தோமாயின் வியப்பினும் வியப்பாயிருக்கும். இச் செடி தண்ணீருக் குள்ளேயே இருக்கும். மேல் மட்டத்தில் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/47&oldid=550778" இலிருந்து மீள்விக்கப்பட்டது