பக்கம்:இன்ப வாழ்வு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

49


தருகின்றன என்பது புலனாகும். இதனைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது மனோன்மணியம் என்னும் நாடகக் காவியத்தில் மிக அழகாகச் சொல்லோவியப்படுத்தி யுள்ளார். அவர் கூற்றுப்படி ஒரு சிறு புல் உட்பட எல்லா உயிர்களுமே குறிக்கோளுடன் வாழ்கின்றன. எனவே எதையும் தாழ்வாக எண்ணுவதற்கில்லை. ஒரு சிறு புல்லானது தன் சிறு பூக்குலையை மேலே உயர்த்தி, தேன் துளியினையும் தாங்கி, ஈக்களை அழைத்துத் தேன் அருந்தி மகரந்தச் சேர்க்கை உண்டாகச் செய்து கருவுற்றுக் காய் கனிகளை ஆக்கிப் பலர்க்கும் பயனளிக்கிறது. இக் கருத்தை அவர் பாடியுள்ள

‘இதோ ஒ! இக்கரை முளைத்த இச் சிறுபுல்

சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி அதன் சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனது பூம்பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ...??? என்னும் மனோன்மணிய (மூன்றாம் அங்கம் - இரண்டாம் களம்) அடிகளால் அறியலாம்.

ஆகவே, அஃறிணைப் பொருளாகிய மலர்களே இவ்வாறு மனையறங் காத்து மாநிலத்திற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்க, அதே நேரத்தில் உயர்திணையாகிய மக்களுள் சிலர், நன்முறையில் மனைவாழ்க்கை நடத்தாமலும் பிறர்க்குப் பயன்படாமலும் வறிது கழிவதை எண்ணுங்கால், அம் மக்களினத்தைச் சேர்ந்த அனைவரும் வெட்கப்பட வேண்டுமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/50&oldid=550782" இலிருந்து மீள்விக்கப்பட்டது