பக்கம்:இன்ப வாழ்வு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகளின் இன்ப இல்லறம்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் என்னும் மாபெருந் தமிழிலக்கண நூலை இயற்றிய தொல்காப்பியர், பறவைகளும் விலங்குகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து அறிவுகளையுடைய உயிர்களாகும் என்று கூறியுள்ளார். இதனை, ‘மாவும் புள்ளும் ஐயறி வினவே” என்னும் தொல்காப்பிய நூற்பாவா லறியலாம். அடுத்து அவரே, மக்கள் (மனிதர்கள்) மன அறிவோடு ஆறு அறிவுகளையுடைய உயிர் என்றும், பறவை விலங்குகட் குள்ளும் ஆறு அறிவு பெற்றவை உண்டு என்றும் கூறிப் போந்தார். இதனை,

“மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே ஒருசார் விலங்கும் உளவென மொழிப’

என்னும் தொல்காப்பிய நூற்பாவா லுணரலாம்.

முவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல் காப்பியர் இங்ஙனம் கூறியிருக்க, சில நூற்றாண்டுகளுக்கு முன் (13-ஆம் நூற்றாண்டில்) வாழ்ந்த பவணந்தி முனிவர் என்பவர் தாம் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/51&oldid=550783" இலிருந்து மீள்விக்கப்பட்டது