பக்கம்:இன்ப வாழ்வு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இன்ப வாழ்வு


அவற்றுள் சிலவற்றின் இன்ப வாழ்வை இலக்கியங்களின் துணைகொண்டு இனிது நோக்குவோம்.

இக்கட்டுரையில் முன்று பறவைகளைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் முன்று விலங்குகளைப் பற்றியும் பார்ப்போம். முதலில் பறவை வரிசையில் அன்றில் பறவையை எடுத்துக் கொள்வோம்.

அன்றில்

அன்றில் பறவையைப் பெரும்பாலான மக்கள் பார்த்திராதது மட்டுமல்ல--கேள்விப்பட்டும் இருக்கமாட்டார் கள். தமிழ் இலக்கியங் கற்றோரே இதனை மிகவும் அறிவர். இஃது ஒருவகை வியத்தகு பறவை. ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் எப்போதும் இணைபிரியாது வாழுமாம். ஒன்றை ஒன்று பிரிந்து பிறகு கூடமுடியாது போய்விட்டால் இறந்து போகுமாம். ஒன்றிய காதலர்க்கு ஒப்புமை கூறுதற் கேற்ற விலைமதிக்கமுடியாத பொருள் அன்றில். அன்றில் போல் ஒன்றி வாழ்க’ என்று திருமண மக்களுக்கு வாழ்த்து வழங்குவதற்குப் பயன்படக்கூடிய பொருள் அன்றில். பழங்காலச் சங்க இலக்கியங்களில் அன்றிலைப்பற்றி மிகுதியாகக் காணலாம். அன்றில் கருநிறம் உடையதாம். அதன் தலையில் நெருப்புப்போல் சிவந்த பூப்போலும் தோற்ற முடைய கொண்டை இருக்குமாம். அதன் அலகு வாய் இறாமீன்போல் வளைந்து நுனி கூராயிருக்குமாம். கால்கள் மிகவும் கறுத்திருக்குமாம். தைத்து உணவு வைத்து உண்ணுவதற்கு ஏற்ப அகலமாயிருக்கிற இலைகளையுடைய “தடவு’ என்னும் ஒருவகை மரத்திலாவது-அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/53&oldid=550785" இலிருந்து மீள்விக்கப்பட்டது