பக்கம்:இன்ப வாழ்வு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

53


புலவர்களால் பெண்ணை’ என்று அழகுபடுத்திச் சொல்லப்படுகிற பனைமரத்திலாவது அந்தப் பறவை கூடு கட்டி வாழுமாம். ஆண் சிறிது நேரம் பிரிந்திருந்தாலும், பெண் அதனைக் கூவிக் கூவி அழைத்துக்கொண்டே யிருக்குமாம். நள்ளிரவில், பிரிந்து வருந்துகிற காதலர்கள் கேட்டுக் கேட்டு ஏங்கி நொந்து வையும்படி, ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் காதல் களியாட்டப் பண்ணொலி எழுப்புமாம். பிரிந்து தனித்திருக்கின்ற காதலர்கள், என்றும் ஒன்றியிருக்கிற அன்றில் இணை (ஜோடி) யைப் பொறாமைக் கண்களுடன் பார்த்து, இவை பெற்ற பேறு நாம் பெறவில்லையே’ என்று பெருமுச் செறிந்து நைந்து உருகுவார்களாம். என்னே அன்றிலின் ஒன்றிய வாழ்வு இந்தச் செய்திகளை யெல்லாம் குறுந்தொகை என்னும் சங்கநூலில் உள்ள,

‘நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு தடவின் ஓங்குசினைக் கட்சியில், பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார் இஃதோ தோழிநம் காதலர் வரைவே’ (160)

“மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை

அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர் கொல் வாழி தோழி’ (177)

கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்

வயவுப்பெடை அகவும் பானாட் கங்குல் துயில்துறந் தனவால் தோழி என் கண்ணே (301)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/54&oldid=550786" இலிருந்து மீள்விக்கப்பட்டது