பக்கம்:இன்ப வாழ்வு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இன்ப வாழ்வு


மிகுதிப்படுத்திக் காட்டுகிறார். அதாவது, இயற்கையிலேயே உயரமாயிருக்கிற தென்னைமரங்களுக்குள்ளேயே அம்மரம் ஓங்கிய மரமாம்-இரும் (பெரிய) மரமாம். இரும் என்றால் பெரிய என்று பொருளாம். இங்கே பெரிது என்பதும் உயரத்தைக் கொண்டுதானே! அப்படியேதான் என்றாலும், தெங்கில் ஏறிக்கொண்டன என்று கூறுவதோடு புலவர் விட்டாரா? இல்லை! தெங்கின் உயர் மடல் ஏறின என்று கூறியுள்ளார். தென்னை மரத்தில் அன்னங்கள் ஏறிக் கொண்டன என்றால், அதன் மடலில் (மட்டையில்) ஏறிக் கொள்வதைத்தான் குறிக்கும். தென்னையின் மட்டை களுக்குள் மிகவும் நாள்பட்ட மட்டைகள் பழுத்துக் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். எனவே, தொங்கும் மட்டையில் அன்னம் அமரமுடியாது. நடுத்தரமான மட்டைகள் பக்க வாட்டத்தில் நீட்டிக்கொண்டிருக்கும். அத்தகு மட்டைகளிலும் அன்னங்கள் அமர விரும்பவில்லை. ஆனால் புதிய பச்சிளங் குருத்துமட்டைகளோ மேல்புறமாக விண்ணை நோக்கி நெட்ட நெடுந் தோற்றத்திலே நீண்டு நிமிர்ந்திருக்கும். தென்னைமரத்தின் பகுதிகளுக்குள் இப்பகுதிதான் மிகவும் உயரத்தில் உள்ளதாகும். இந்த மிகமிக உயரமான பகுதியில்தான் அன்னங்கள் தங்கின என்று குறிக்கவே தெங்கின் உயர் மடல் என்றார் ஆசிரியர். அதுவுமன்றி, ஓங்கிருந் தெங்கின் உயர் மடல் அமர’ என்று பாடாது உயர் மடல் ஏற’ என்று பாடியிருப்பதிலுள்ள நயத்தையும் நாம் சுவைக்க வேண்டும். ‘அமர என்று சொல்லிவிட்டால், உயரத்தின் எல்லையை வரையறுத்து முடித்து விட்டதாய் விடும். ஆனால் ஏற’ என்று சொன்னதின் வாயிலாக, இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/61&oldid=550794" இலிருந்து மீள்விக்கப்பட்டது