பக்கம்:இன்ப வாழ்வு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இன்ப வாழ்வு


என்னுடன் இருந்தபோதும், அவர் உடல்தான் இங்கே இருந்ததே தவிர, உள்ளமோ என்னைவிட்டு, பொருளுக்காக அந்த வழிப்பக்கமே படர்ந்து சென்றுகொண்டிருந்தது. அது போகட்டும்! காதலர் அந்த வழியே பிரிந்து சென்றாலும், அவரது உள்ளமாவது என் பக்கம் திரும்பி என்னை நினைத்துக் கொண்டிருக்கலாமல்லவா? அஃது மில்லை! அவரது உள்ளமும் அப்பக்கமே சென்றுதொண்டி ருக்கிறது”-என்னும் நயமெல்லாம் ‘காதலர் உள்ளம் படர்ந்த நெறி’ என்னும் பாடற் பகுதியில் அடங்கிக் கிடக்க வில்லையா? இவ்வாறு தலைவரது உள்ளம் படர்ந்த நெறியில்தான் இணை மான்கள் இன்பவாழ்வு நடத்து கின்றன; அதனை அவர் அறியார்போலும்! எனத்தலைவி சுட்டாமல் கட்டியிருப்பது சுவை மிகுக்கின்றதன்றோ! இப் பாடலில் புலவரின் கற்பனை கலந்திருந்தாலும், மான்களின் இணைந்த அன்பில் உண்மையும் இராமற்போகாது. மனைவி மக்களைத் தவிக்கவிட்டுத் தாம் மட்டும் உணவுக் கடைக்குள் நுழைந்து கண்டனவற்றை விழுங்கியும் மற்ற புலன் நுகர்வுகளைத் துய்த்தும் வெளி ஆடம்பர வாழ்க்கை வாழும் புல்லர்களுக்கு இப்பாடலின் உட்பொருள் உறைக்குமா?

இதுகாறும் மென்மை இயல்புடைய மான்களின் காதல் வாழ்வைக் கண்டோம். இனி நேர் எதிர்மாறான குறும்புத்தனமுடைய குரங்குகளின் காதல் வாழ்வையுந் தான் காண்போமே!

குரங்கு

குறும்பு செய்யும் குழந்தைச் சிறார்களைக் குரங்கு

பெரிய வால் என்றெல்லாம் உலகியலில் குறிப்பிடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/69&oldid=550802" இலிருந்து மீள்விக்கப்பட்டது