பக்கம்:இன்ப வாழ்வு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இன்ப வாழ்வு


அவாவுகிறது. அந்த மந்தி சிந்தும் கனிகளுக்காக வானரம் கையேந்திக் கெஞ்சுகிறது. உண்மைதானே! தான் உழைத்துத் தேடிக்கொண்டு வந்து மனைவி கையில் கொடுத்த பொருளையே, திரும்ப உணவாக அவள் கையாலேயே பெற்று உண்டு மகிழத்தானே கணவன் விரும்புகிறான்! இதற்கு வானரங்களும் விதிவிலக்கு இல்லைபோலும்! இந்தச் சுவையான நிகழ்ச்சியை,

“வாணரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்......

கூனல்இளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.” என்னும் குற்றாலக் குறவஞ்சியின் பாடல் பகுதியால் தெரிந்துகொள்ளலாம்.

இப்பகுதி யாரால் யாருக்கு ஏன் சொல்லப்பட்டது என்பதை ஆராயின் மிகவும் சுவையாக இருக்கும்:

குற்றாலத் தலைவனிடம் மையலுற்ற வசந்தவல்லி என்னும் தலைவி, அவனது காதல் தனக்குக் கை கூடுமா என்பதை அறியக் குறத்தியொருத்தியிடம் குறி கேட்கிறாள். அந்தக் குறத்தி தன் சொந்த இருப்பிடத்தைச் சொல்லு முகத்தால் குற்றால மலையைச் சிறப்பித்துப் பாடுவதே இப்பாடலாகும். இதில் சில நயங்கள் அமைந்து கிடக்கின்றன. ஏ. அம்மே! மந்தி பிகுவாக இருக்க, வானரமே வளைந்து கொடுக்கிறது; ஆனால் காதலன் கவனியாதிருக்கவும் நீயாக வலிந்து அவனை நாடுகிறாயே! என்று தலைவியைக் குறத்தி குத்திப் பேசுவதுபோல் அமைந்திருக்கும் இப்பகுதி நயமாக இல்லையா? ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/71&oldid=550805" இலிருந்து மீள்விக்கப்பட்டது