பக்கம்:இன்ப வாழ்வு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

73


அக்களிறுகளுள் ஒன்று, மாற்றரசரை மோதி முடியை இடறித் தள்ளித் தன் காலின் கீழே போட்டு மிதித்துத் தேய்த்து நசுக்கியது. அதனால் அதன் கால் நகங்கள் சிதைந்ததையும் அது பொருட்படுத்தாமல் மேலும் போர் வேட்டெழுந்தது. இறுதியில் சோழனுக்கே வெற்றி!

வெற்றிக் கொடி நாட்டிய சோழன் படைகளுடன் ஊர் திரும்பினான். காத்துக் கொண்டிருந்த அரசி அரசனை வரவேற்று அந்தப்புரத்தில் மகிழ்ந்தாள். படை மறவரது வருகையைப் பார்த்த கண் வாங்காது எதிர் நோக்கியிருந்த அவர் தம் மனைவியர், இஞ்ஞான்று கணவர் மீண்டதால் கலந்துறவாடிக் களிப்புக் கடலுள் ஆழ்ந்தனர். ஆனால், சோழனது களிற்று யானையின் வரவுக்காகக் காத்து நின்ற - அதன் காதல் மனையாட்டியாகிய பிடி (பெண் யானை) மட்டும் ஏமாந்து நின்றது. ஏன்? ஆண் யானை வெற்றி தேடித் தந்து விட்டு வீரப்போரில் இறந்து விட்டதா? இல்லையிலலை. அ.தும் வெற்றி வாகையுடன் சோழனோடு மீண்டுதான் வந்துள்ளது. ஆனாலும், அரண்மனைக் கொட்டிலுக்குள் நுழையாது புறங்கடை யிலேயே நின்றுகொண்டிருந்ததாம். ஏன்?

பகைவரது மதிலை இடித்துத் தள்ளியதால் முறிந்து போன கொம்பும், பகைவரது முடியை இடறித் தேய்த்ததால் தேய்ந்துபோன நகமும் தன்னைப்பொலிவிழக்கச் செய்து விட்ட பொல்லாமையைக் கண்டு, பிடி என்ன எண்ணிக் கொள்ளுமோ என நாணி, அப்பிடியின் முன்பு செல்ல மனமில்லாது புறங்கடையிலேயே களிறு நின்று கொண்டி ருந்ததாம். நல்ல களிறு! இதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/74&oldid=550808" இலிருந்து மீள்விக்கப்பட்டது