பக்கம்:இன்ப வாழ்வு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இன்ப வாழ்வு


நடந்து கொள்கிறார்கள் என்று இழித்துப் பேசுகின்றோமேஅவ் விலங்குகளுக்குள்ளும் மக்களினும் நேரிய ஒழுக்க முடையவை உண்டென்பது புலனாகிறதன்றோ? விலங்கு களின் ஒழுக்க நெறியை நம்பாது, புலவர்களின் வெறுங் கற்பனையே என்று ஐயுறுவோர், விலங்குகளின்மேல் உயர்ந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டை ஏற்றிச் சொல்வதன் மூலம், மக்களுக்கு உயர்ந்த ஒழுக்க நெறியைப் புலவர்கள் வற்புறுத்தியுள்ளார்கள் என்பதையாவது புரிந்து கொள்வார் களா?

இல்லற வாழ்வு

உலக மக்களை இல்லறத்தார், துறவறத்தார் என்னும் இரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். துறவறத்தாரோ நூற்றுக்கு ஒருவர் தேறுவதே. அரிது. எனவே, மிக மிகப் பெரும்பாலோர் இல்லறத்தார்கள்தானே. எனவே மக்கள் வள்ளுவர் நெறி கின்று தத்தம் இல்லக் கடமைகளை ஒழுங்காய் நிகழ்த்தினால் அவர்தம் இல்லற வாழ்வு இனிது செழிக்கும்.

நூல் வள்ளுவர் இல்லம் சுந்தர சண்முகனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/77&oldid=550811" இலிருந்து மீள்விக்கப்பட்டது