பக்கம்:இன்ப வாழ்வு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

79


சுருங்கக் கூறின் அவள் உடம்பைச் சுட்டெரிக்கின்றது காமத் தீ.

அவ்வெப்பத்தைப் போக்க எண்ணிய தோழிகள்,வசந்த வல்லியை மேல்மாடியில் நிலா முற்றத்திற்குக் கொண்டு போனார்கள். வாழைக் குருத்தில் கிடத்தினார்கள். மேலே குளிர்ந்த மலர்களைக் கொட்டினார்கள். சந்தனக் குழம்பைப் பூசினார்கள். வெட்டிவேர் விசிறி கொண்டு விசிறினார் கள். இன்பக் கதைகள் பல எடுத்துரைத்தார்கள். ஆனால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப்போல் குளிர்ச்சிக்காகச் செய்த முயற்சிகளெல்லாம் தவிடுபொடியாயின. ஒரே வெப்பம் ஒரே வெப்பம்! சந்தனக் குழம்பு கொதிக்கின்றது. மலர்கள் கருகின. முத்துமாலைகள் பொரிந்தன. வெட்டிவேர் விசிறி வீசுகின்றது அனலை. வாழைக் குருத்து இருக்கு மிடமே தெரியவில்லை. என்ன செய்வாள் ஐயோ! போதாக்குறைக்கு அந்தப் பொல்லாத நிலவோனும் (சந்திரனும்) பொசுக்குகின்றான். எல்லார்க்கும் இன்பம் தரும் நிலாக்காரன் வசந்தவல்லிக்குமட்டும் வெப்பம் வீசுபவனாக வெளிப்படுகிறான். அந்தோ! இதுதான் காமத்தீயின் இயற்கைபோலும்!

வெப்பம் தாங்கமுடியாத வசந்தவல்லி அந்த வெண்ணிலாவை நோக்கி வெந்து விளம்பத்தொடங்கு கின்றாள். ‘ஏ நிலவே! கண்ணிலிருந்து நெருப்பைக்கக்கும் அந்தச் சிவன் முடியில் சேர்ந்து சேர்ந்து, நீயும் நெருப்பை வீசக் கற்றுக்கொண்டாயோ? தண்ணிய குளிர்ந்த அமிழ் தமும் நிலவும் திருமகளும் திருப்பாற் கடலிலிருந்து தோன்றியதாகப் புராணங்கள் புகலுகின்றனவே! தண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/80&oldid=514751" இலிருந்து மீள்விக்கப்பட்டது