பக்கம்:இன்ப வாழ்வு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இன்ப வாழ்வு


தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி ஆறுதல் பல சொன்னாள். சொல்லியும் தேறுதல் உண்டாகவில்லை. பின்பு தோழியை நோக்கிச் சிவன் திருமுன்பு தூது சென்று வா என்று சொன்னாள் வல்லி.

ஐயோ! நான் எப்படி அவர் முன்பு தூது செல்வேன். அவர் என்னைப்பற்றி என்ன எண்ணிக் கொள்வாரோ’ என்று வெட்கப்பட்டாள் தோழி.

அதற்கு வசந்தவல்லி, “தூது சென்றால் சிவன் ஒன்றும் எண்ணிக்கொள்ளமாட்டார். அது அவருக்கு வழக்கமான வாடிக்கை. அவரிடம் தூது அனுப்புவோர் மிகப் பலர். அவ்வளவு ஏன்? அவரே சுந்தரருக்காகப் பரவைநாச்சியாரிடம் ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது சென்றுள்ளாரே! ஆகையால் அவரைப் பொறுத்தமட்டில் வெட்கமே வேண்டியதில்லை’ என்று கூறினாள்.

‘அப்படி என்றால் நான் என்ன சொல்லவேண்டும்’ என்று கேட்டாள் தோழி.

என்ன சொல்லவேண்டுமா? என் நிலைமையை எல்லாம் அறிவித்து,

“வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்

மாலை யாகிலும் தரச்சொல்லு’

என்று கூறி அனுப்பினாள் தலைவி. பின்பு குற்றாலநாதர் தன்னுடன் கூடுவாரோ? மாட்டாரோ? என்று குறியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் குறி கேட்கலையோ குறி குறி'குறி கேட்கலையோ குறி குறி’ என்று கூவிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/83&oldid=550814" இலிருந்து மீள்விக்கப்பட்டது