பக்கம்:இன்ப வாழ்வு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

83


குறப்பெண் ஒருத்தி குறுகினாள் அங்கே. அவள் இடையில் ஒரு குலுக்கும், நடையில் ஒரு தளுக்கும், விழியில் ஒரு சிமிட்டும், மொழியில் ஒரு பகட்டுமாய்க் காணப்பட்டாள். கையில் குறிசொல்லும் கோல்; கழுத்தில் பச்சைமணிபவளமணி, கருங் கூந்தலில் செச்சை மலர்; நெற்றியில் நீலநிறப் பொட்டு, இடுப்பில் கூடை-இவைகளின் தொகுப்பே அக்குறப்பெண்.

குறி சொல்வதாகக் குறத்தி கூவியதைக்கேட்ட வசந்தவல்லி, குற்றாலநாதரே கிடைத்துவிட்டதாக எண்ணி ஓடோடியும் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். சென்றதும் குறத்தியை நோக்கி, “ஏ குறவஞ்சியே! உன் சொந்த மலை எந்த மலை? அந்த மலையின் வளத்தை அறிவிக்கக் கூடாதா என்று ஆவலுடன் கேட்டாள். உடனே தொடங்கிவிட்டாள் குறப்பெண். “ஒ அம்மே! எங்கள் மலையின் வளப்பத்தைச் சொல்லுகிறேன் கேள்! எங்கள் மலையில்,

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.” எங்கள் மலையிலே ஆண் குரங்குகள் பெண் குரங்கு களுக்குத் தாமாய்ப் பழங்கொடுத்துக் கொஞ்சும். பெண் குரங்குகள் சிந்துகின்ற பழங்களுக்கு ஆண் குரங்குகள் கையேந்தி நிற்கும். ஊம் தெரிகிறதா?’ என்றாள் குறவஞ்சி. இப்பாட்டில் ஆழம் மிகவும் உண்டு. என்ன அது?

இதைக்கேட்ட வசந்தவல்லி, ஆகா! விலங்காகிய பெண்குரங்கு செய்த நற்பேறுகூட நான் செய்யவில்லையே. பெண்குரங்கினிடம் ஆண்குரங்கு தானாகவே சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/84&oldid=550815" இலிருந்து மீள்விக்கப்பட்டது