பக்கம்:இன்ப வாழ்வு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இன்ப வாழ்வு


கிறாயே! சரி, நான் ஒருவனைக் காதலித்தது உண்மை யானால் அவன் பெயரைச் சொல்லடி.

குற:- பேராம்மே! அவன் பேர் “பெண் சேர வல்லான்’ என்பது. அவன் உனக்குக் கட்டாயம்கிடைப்பான். (சிரிக்கிறாள்).

வல்லி:- என்னடி மதம் உனக்கு! இவ்வளவு ஏளனமாகச் சொல்லுகிறாய். நாக்கை அடக்கிப் பேசு.

குற:- இல்லையம்மா! பெண் என்றால் ஸ்திரி; சேர என்றால் கூட, வல்லான் என்றால் நாதன். ‘பெண் சேர வல்லான்” என்றால் ‘திரிகூடநாதன்’. அது தான் குற்றாலநாதர் பெயர். அவர் உனக்குக் கட்டாயம் கிடைப் பார். உறுதி உறுதி உறுதி. சரிதானா! (சிரிக்கிறாள்).

கேட்டாள் வசந்தவல்லி. உண்மை அதுதானே! அப்படியே நாணித் தலை கவிழ்ந்தாள். குறத்திக்குத் தகுந்த பரிசு கொடுத்தனுப்பி, தான் இறைவனுடைய பேரின்பத்தில் ஈடுபடலானாள்.

k :: 水

வசந்தவல்லி ஒருபுறம் ஆறுதலடைய, மற்றொரு புறம் குறத்தியைத் தேடிக்கொண்டு அவள் கணவனாகிய குறவன் ஊர் ஊராய்த் திரிகின்றான். எங்கும் கிடைக்க வில்லை அவள். குறவன் தேடித் தேடிப் பஞ்சு பூத்த கண்ணனாகி, “ஆகா ஆகா! அவளை இணைபிரியா திருப்பதற்கு அவளுடைய ஆடை அணிகள் செய்த நல்வினை கூட நான் செய்யவில்லையே!” என்று ஏங்குகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/91&oldid=550822" இலிருந்து மீள்விக்கப்பட்டது