பக்கம்:இன்ப வாழ்வு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

97


வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை. ஓங்கி வளர்க! என்னும் வாழ்த்தைப் பெற்றது அம்மரம். தோழியும் இதனை அறிந்துகொண்டாள்.

அன்றிரவு காதலர் இருவர்க்கும் தூக்கம் பிடித்திருக்கும் என்று எவரேனும் சொல்லமுடியுமா? சொன்னால்தான் பொருந்துமா?

மூன்றாம் நாள், அதே மலைச்சாரல். தலைவி ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். தோழி ஆட்டிக் கொண்டிருந்தாள். ஊஞ்சல் கட்டியுள்ள கிளையில் கருநாகம் ஒன்று ஊர்வதைக் கண்டாள் தலைவி; “பாம்பு பாம்பு’ என்று கத்தினாள். அவ்வோசை அங்குவந்த தலைமகன் காதுக்கெட்டியது. ஊஞ்சலருகே ஓடிவந்தான். தற்செயலாக ஊஞ்சல் அறுந்தது. விழத்தொடங்கிய தலைவியை ஏந்திக் கொண்டான். விழுந்தது முந்தியா? ஏந்தியது முந்தியா? என்று உணரமுடியாதவளாய்த் திகைத்தாள் தோழி. பின் தலைவிக்குத் தண்ணீர் கொண்டுவர ஓடினாள். செவ்வி அறிந்து காதலர்கள் உரையாடிக் கொண்டார்கள். ஒருவர்க்கொருவர் மணந்து கொள்வதாக உறுதியும் கொண்டார்கள். உண்மை உணர்ந்த தோழியும் உறுதுணையாய் இருக்கலானாள்.

முதல் நாள் தளிர்த்து, இரண்டாம்நாள் அரும்பி, மூன்றாம்நாள் மலர்ந்து சொட்டும் காதல் தேனைப்பருகி வரலானார்கள். நாடோறும் சந்திப்பு நிகழ்ந்தது. இடையில் ஒரு நாள், தோழி உட்பட மூவரும் ஓர் அழகிய பாறையில் அமர்ந்திருந்தனர். தலைவி ஒரு பொருளைத் தலைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/98&oldid=550829" இலிருந்து மீள்விக்கப்பட்டது