பக்கம்:இன்றும் இனியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இயற்றமிழ் பொதிய மலையில் பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே வளர்ந்த தமிழ் எனும் கன்னி உலகிடைத் தோன்றிய உயர்தனிச் செம் மொழிகளாம் அணங்குகளுள் ஒருத்தியாவாள். 'தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணர முடியாத இயல்பினையுடையவள் இக் கன்னி. இத்துணை ஆயிரம் ஆண்டுகளாக இவள் வாழ்பவ ளாயினும், முதுமைக் குறி ஏதுமின்றிச் சீரிளமை உடையவளாய் வாழ்ந்துவருகிறாள். இந்தப் பெருமாட்டியின் வளர்ச்சியைக் கருதி அப் பழைய நாளில் இவளை முத்தமிழ் என வழங்கினர். இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுதிகளையே அவ்வாறு குறித்தனர். இவற்றுள் முதல் வகை வளர்ச்சியைக் காண்பதே இன்று நம் கருத்தாகும். நல்ல பருவ காலத்தில் தினம் தினம் புதிய அழகுடன் விளங்கும் ஒரு பெண்ணின் அத்துணை அழகையும் காணவேண்டுமாயின், அதனை ஓயாது உடன் இருந்து காண்பதே சிறந்த வழி. இதிலும் ஒர் இடையூறு உண்டு. அழகிலும் இருவகை உண்டு. சிலவகை அழகுகள் நிலை பெற்றிருப்பன. சிலவகை