பக்கம்:இன்றும் இனியும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ் 89 சில நேரம் நின்று மறைந்துவிடுவன. நிலைபெற்ற அழகுடையவர்களும், அழகிய புன்முறுவல் கொள்கையில் அதிக அழகுடன் விளங்கக் காண்கிறோம். ஆனால், புன்முறுவலால் பிறந்த அழகு உடனே மாறிவிடும் இயல்புடையதென்பது கூறல் வேண்டா. தமிழ்க் கன்னியின் நிலைபெற்ற அழகுப் பகுதியை நமக்கு எடுத்துக்காட்ட இன்று நூற்றுக் கணக்கான நூல்கள் உண்டு. தோன்றி மறையும் அவள் அழகை வெளியிட்ட பல நூல்கள் இன்று இல்லாமல் ஒழிந்தன. இடைக்காலத்தில் இருந்து இன்று பெயரளவில் மட்டும் கிடைக்கும் அத்தனை நூல்களும் இருந்திருப்பின், இக் கன்னியின் பேரழகைப் பல கோணங்களிலிருந்து காணும் வாய்ப்புக் கிடைத் திருக்கும். அது ஒருபுறம் இருக்க, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத் தமிழ்க் கன்னி நாடாளும் உரிமை பெற்று, வடiேங்கடம் தென் குமரியிடைப்பட்ட நாட்டில் அரசு செலுத்தி வந்தாள். அந்நாளில் இவளுக்குப் பல அணிகளையும் செய்து சார்த்தி மகிழ்ந்த பெருமக்கள் பலருண்டு. கழுத்தில் அணிகின்ற பெரிய வைரமாலை செய்து சார்த்தினவர்களும் உண்டு. விரலுக்குரிய கணையாழி செய்தவர்களும், மூக்கில் இடும் சிறிய பொட்டு ஒன்றை மட்டுமே செய்தவர்களும் உண்டு. அவர்கள் பல அணிகளைச் செய்து தம் அரசிக்குச் சார்த்தி, மகிழ்ந்தனர். . । அணியைச் செய்துவிடலாம் எளிதாக ஆனால், அவ்வணி அரசியின் சிறப்புக்கு ஏற்றதா? அவள் அதை