பக்கம்:இன்றும் இனியும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அ.ச. ஞானசம்பந்தன் அணியலாமா? என்பதை யார் அறிந்து கூறுவது? தனி ஒருவருக்கு ஓர் அணி அழகென்று தோன்றலாம். பிறர் அதை வெறுக்கவும் செய்யலாம். இதற்கு வழி யாது? ஒரு கூட்டமே இருந்து ஒவ்வோர் அணியும் செய்து தரப்பட்டவுடன் அதனை ஆய்ந்து கண்டு தன் அரசிக்கு அவ்வணி ஏற்றதுதானா என்பதில் முடிவு கூறிற்று. இக் கூட்டத்தையே 'தமிழ்ச் சங்கம்' என அந்நாளைய தமிழர் கூறினர். மதுரை மாநகரில் நிலை பெற்ற இச் சங்கம், 'சங்கம்' என்ற பெயருடன் இருக்க வில்லை. சங்கம் என்பது பிற்காலத்தார் இட்ட பெயராகும். தமிழ் நிலை என்ற பெயருடன் பழைய சங்கம் இருந்திருக்கும்போலும். 'தமிழ் நிலைபெற்ற தாங்கருஞ்சிறப்பின் மதுரை (சிறுபாணாற்றுப்படை) என்பது போன்ற அடிகள் இவ்வுண்மையை அறிவிக் கின்றன. - இயற்றமிழ் என்ற தலைப்புப் பரந்துபட்டது. கிறித்துநாதருக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவ ராகலாம் என்று கருதப்பெறும் தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியமே இன்று நமக்குக் கிடைக்கும் இயற்றமிழ் நூல்களுள் மிகப்பழமையானது. ஏனைய மொழிகளிலும் பழைய இலக்கணங்கள் உண்டு. எனினும், அவை எழுத்து, சொல் என்ற இரண்டிற்குமட்டுமே இலக்கணம் கூறும். எழுத்தும் சொல்லும் கற்பது பொருளதிகாரத்தின் பொருட் டன்றே? பொருள் இல்லையேல் இவை இரண்டும் பயனற்றனவே என்று கூறும் இறையனார் களவியல் கதை, ஆழ்ந்த ஓர் உண்மையை உட்கொண்டது. இத் தமிழர் பொருளதிகாரத்துக்கு எத்துணை மதிப்பு வைத்திருந்தனர் என்பதையே இது புலப்படுத்துகிறது.