பக்கம்:இன்றும் இனியும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ் 91 பொருளதிகாரம் என்பது மக்கள் வாழ்க்கை பற்றிக் கூறும் பகுதி. மொழிக்கு இலக்கணம் வகுக்கப் புகுந்த தொல்காப்பியனார், அம் மொழி பேசும் மக்கள் வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்தார். உலக மொழிகளில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும் இது. தொல்காப்பியத்தை அடுத்துக் கிறித்துநாதர் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் பலதிறப் பாடல்கள் தோன்றின. புறத்திணை பற்றித் தொகுக்கப் பெற்றுப் 'புறநானூறு' என்ற பெயருடன் இன்று வழங்கும் தொகுப்பு நூலில் பெரும்பான்மையான பாடல்கள் இக்கால எல்லையில் தோன்றினவேயாம். இப் பாடல்கள் அந்நாளில் வாழ்ந்த நம் மூதாதையர் என்ன உண்டனர், எவற்றை உடுத்தனர், என்ன நினைத்தனர், எவற்றைக் குறிக்கோளாகக் கொண்டனர் என்பன போன்ற அரிய கருத்துகளை அறிய உதவுகின்றன. சுருங்கக்கூறின் புறநானூறு ஒன்றுமட்டும் கொண்டு தமிழருடைய நாகரிகப் பண்பாட்டு வரலாற்றைத் தொகுத்துவிடலாம் என்பர். இத்தகைய ஒரு தொகுப்பு நூலை உலக மொழிகளில் வேறு யாண்டும் காண்டல் அரிது. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை முதலிய எட்டுத்தொகை (தொகுப்பு நூல்கள் - Anthologies) நூல்கள் ஏறத்தாழ இந்தக் கால அளவில் தோன்றின என்று கூறுதல் மிகையாகாது. இவற்றுட் சில பாடல்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டை அடுத்தும் தோன்றியிருக்கலாம். . - இப் பகுதியிலேதான் 'பத்துப்பாட்டு என்று இன்று வழங்கப்படும் தொகையில் பல பாடல்கள் தோன்றியிருத்தல் வேண்டும். பத்துப்பாட்டும் எட்டுத்