பக்கம்:இன்றும் இனியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அ.ச. ஞானசம்பந்தன் தொகையும் தொகை நூல்கள் எனினும், தமிழர் வாழ்வின் ஆணிவேரான அகம், புறம் என்ற இரண்டையும் எடுத்து விளக்குவனவாதலின், இயற்றமிழ் வளர்ச்சியில் இவை பெருமதிப்புக் கொண்டவை. கி.பி. முதலாம் நூற்றாண்டினதாக இருத்தல் கூடும் என்றும், தொகை நூல்கட்கு முற்பட்டதாக இருத்தல்கூடும் என்றும் கருத்து வேறுபாடுகட்கு இடந்தந்து நிற்கும் திருக்குறளும் இக் காலத்தைச் சேர்ந்ததேயாகும். உலகப் பொதுமறை என்று. கூறுவதற்குரிய அனைத்து மதிப்பையும் பெற்று, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டும் சிறப்புடையதாய் விளங்கும் குறளின் பெருமையை விரிக்க இஃது இடமன்று. தமிழ்க் கன்னியின் மார்பை அணி செய்யும் மதாணியாய் விளங்குவது இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெருநூல் நெஞ்சை அள்ளும் சிலப்பதிக்ாரமாகும். 'முத்தமிழ்க் காப்பியம்' என்று பிற்காலத்தில் கொண்டாட்ப்படும் பெருமை பெற்ற இஃது, இயற்றமிழ் வளர்ச்சியில் புதுமுறை வகுத்தது. சாதாரணமான ஒரு வணிகளைப் பற்றியும் மேலோ ராயினும் நூலோராயினும் பிணி எனக்கொண்டு பிறக்கிட்டொழியும் கணிகையர் வாழ்க்கையுடைய ஒருத்தியைப்பற்றியும் பெருங்காப்பியம் ஒன்றை எழுதி, அதனைப் பிறர் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்யலாம் என்ற பேருண்மையை உலகுக்குக் காட்டிய பெருமை இளங்கோ அடிகட்கு உரியதாகும். தமிழில் முதலில் தோன்றிய கலைக் காப்பியமாகும் இது. பெருங்காப்பிய இலக்கணம் அனைத்தும் பெற்று