பக்கம்:இன்றும் இனியும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. இயற்றமிழ் • 93 விளங்கும் இது, தமிழ்க் கன்னியின் நடை அழகை அறிவிக்கும் சிலம்பாய் அமைந்தது சாலப் பொருத்த முடையதே. சிலம்பை அடுத்து மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் ‘மணிமேகலை’ என்னும் காப்பியம் எழுந்தது. மணிமேகலை காலத்தில் இயற்றமிழ் மற்றொரு பெரு மாறுதலை அடைந்தது. சமயக் கொள்கை முதலியவற்றை வலியுறுத்த ஒரு வரலாற்றைக் கையாளலாம் என்ற புதுமுறையைக் கையாண்டார் கூலவாணிகன் சாத்தனார். சாத்தனார் புகுத்திய இப் புதுமுறை இயற்றமிழில் நிலைத்து விட்டது. பின்னர்த் தோன்றிய சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பெரிய புராணம், கம்ப ராமாயணம் முதலியன அனைத்தும் இம்முறையில் எழுந்தனவே. வேறு பயன் கருதாமல் காப்பியம் இயற்றும் மரபு இளங்கோவுடன் மறைந்து விட்டது போலும், கி.பி. நான்காம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் தமிழ் நாட்டுக்கும் இயற்றமிழுக்கும் இருண்ட காலம் என்று கூற வேண்டும். தமிழரல்லாத களப்பிரர் என்ற இனத்தார் தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்சி செய்தமையின், தமிழ்மொழி போற்றுவாரற்றுக் கிடந்தது. எனவே, இக்கால எல்லையில் ஒரு பெருநூல் தவிர வேறு ஒன்றுந் தோன்றவில்லை. அவ்வொரு நூலும் சைன சமய நூலாய், மொழி பெயர்ப்பு நூலாய் அமைந்தது புதுமையே. பெருங்கதை என வழங்கும் 'உதயணன் கதை இயற்றமிழ் வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தைப் போன்றது. வடமொழியிலிருந்து