பக்கம்:இன்றும் இனியும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அ.ச. ஞானசம்பந்தன் காப்பியங்களை மொழி பெயர்க்கும் மரபை முதலில் தோற்றுவித்தது பெருங் கதையேயாகும். தமிழ் நாகரிகத்தையும் இலக்கியத்தையும் அடக்கி ண்ட களப்பிரருடைய கொடுமையை வென்று தமிழ் நாகரிகத்தை நிலைநிறுத்த ஒரு புரட்சி தேவைப்பட்டது. அரசியல் முறையில் ஏற்படும் புரட்சியைக் காட்டிலும் வலுவுடையதாய், மக்கள் மனத்தில் தமிழ்ப் பண்பாட்டை மீண்டும் நினைவூட்டும் பணியை மேற்கொள்வதாய் உள்ள ஒருவகைப் புரட்சி தேவைப் பட்டது. இதனைச் செய்தவர் திருஞானசம்பந்தர் என்று போற்றப்படும் சமயகுரவராவர். தமிழ் ஞான 'சம்பந்தன்' என்றும் முத்தமிழ் விரகன்' என்றும் தம்மைக் கூறிக் கொள்ளும் இவர்தாம், களப்பிரர் சமுதாய வாழ்வில் செய்திருந்த கொடுமைகளை மாற்றியமைத்தவர். அன்றியும், அதுவரையில் வழக்கில் அதிகம் பயின்று வாராத விருத்தப்பாவில் தம் பாடல்களை இயற்றிய பெருமை இவரையே சாரும். இதன் பிறகு பழம் பாடல் முறையைப் பின்பற்றி அகவல், கலி முதலிய பாமுறைகள் தலை எடுக்கவே ல்லை. சமயப் புரட்சியால் மக்கள் வாழ்வுமுறை மாறினதுபோல, இயற்றமிழ் பெற்ற மாறுதலாகும் இது. இம் மாறுதலால் தமிழ்க் கன்னி புதிய பொலிவு பெற்றாள். ஆசிரியம் வஞ்சி முதலிய பா வகைகள் கவிஞனுடைய கற்பனைக்கு ஏற்ப விரிந்து கொடுப்பவையல்ல. எனவே, சொல்லாட்சி முறையிலும் ஒசையிலும் கவிஞன் ஏற்றும் பொருளை முற்றிலும் ஏற்க முடியாமல் அப் பா முறைகள் தவித்தன. புதிய விருத்தப் பாடலால் இக் குறை நீங்கிற்று. திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்