பக்கம்:இன்றும் இனியும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ் 95 பாடலிலும் ஆழ்வாராதியர் பிரபந்தங்களிலும் அதற்கு முன்னர்த் தமிழ்க் கவிதைகளிற் காணாத ஒசை அழகைக் காண்டல் கூடும். இப் பெருமாற்றத்தால் இயற்றமிழ் பெற்ற சிறப்பை அளவிட முடியாது. ஏழாம் நூற்றாண்டு தொடங்கிப் பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியத் தமிழ் மொழியின் பொற்காலம் என்று கூறலாம். முதலாழ்வார்களும் நாயன்மாருள் இருவரும் இக்காலத்து வாழ்ந்தவரே. எட்டாம் நூற்றாண்டில் நம்மாழ்வார், பெரியாழ்வார், சூடிக் கொடுத்த நாச்சியார், திருமங்கை மன்னர், சுந்தர மூர்த்தி நாயனார் முதலிய பெரியவர் பலர் விளங்கினர். இப் பெரியார்களால் இயற்றமிழ் பெற்ற வளர்ச்சிக்கு ஒர் அளவேயில்லை. . ஒன்பதாம் நூற்றாண்டில் ஈடு எடுப்பற்றதாய் உலக மொழிகளில் உள்ள பக்திப் பாடல்கள் அனைத்தினும் தலைமை இடம் பெற்ற திருவாசகம்' தோன்றிற்று கற்றோர்க்கு இதயம் களிக்கச் செய்யும் கம்பநாடரின் ஒப்புயர்வற்ற பெருங் காப்பியம் தோன்றிற்று. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி முதலிய நூல்களும் தோன்றின. பத்தாம் நூற்றாண்டில் விருத்தப் பாவில் முதற்காப்பியமாகிய சீவகசிந்தாமணி பிறந்தது. இந் நூற்றாண்டில் சமணப் பெருமக்கள் தமிழுக்குச் செய்த தொண்டு மிகப் பெரியது. இப் பகுதியில் ஒரு நூற்றாண்டு முன்னும் பின்னும் யாப்பருங்கலம், காரிகை முதலிய பாவியல் இலக்கணங்களும், நிகண்டு களும் தோன்றின. . பதினோராம் நூற்றாண்டிலேதான் ஒட்டக் கூத்தருடைய தக்கயாகப்பரணி போன்ற நூல்களும்,