பக்கம்:இன்றும் இனியும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ° -- அக ஞானசம்பந்தன் செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் பிறந்தன. இந் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு உரையிட்ட இளம்பூரண அடிகள் விளங்கியிருத்தல் கூடும். விரிந்த முறையில் நூலுக்கு உரையிடும் மரபு இக்காலத்தே தோன்றியிருத்தல் வேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பத்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடும் சேக்கிழாரின் பெரிய புராணம் தோன்றிற்று. பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதினான்காம் நூற்றாண்டுகளைச் சமய சாத்திரக் காலம் என்று கூறலாம். குறளைப்போலக் கடுகைத் துளைத்துக் கடலைப் புகட்டும் சிவஞானபோதம் முதலிய சைவ சமய சாத்திரங்கள் பன்னிரண்டும் தோன்றியது இக்கால எல்லையிலேயே. வைணவப் பெரியார் பலரும் இக்காலத்திலே வாழ்ந்தவர். நச்சினார்க் கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார் முதலிய பேருரையாசிரியர்களும் இக்காலத்தவரேயாவர். கவிதைப் பெருக்கம் குறைந்து உரைநடை வளர்ச்சி பெற்ற கால எல்லையாகும் இது. இறையனார் களவியல் உரைதான் முதன் முதலில் நாம் காணும் உரைநடைப் பகுதியாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் உரைநடை வகையே நான்கென மொழிப' என்று கூறியிருந்தும், பழைய உரைநடை நூல் ஒன்றும் கிடைத்திலது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இவ்வுரை நடையை அடுத்து மீட்டும் உரைநடை பல்கிய காலம் 13, 14-ஆம் நூற்றாண்டுகளாம். • . கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரை இயற்றமிழ் இருந்து