பக்கம்:இன்றும் இனியும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii எடுப்பாக அமைந்துள்ள இக் கட்டுரை பழந்தமிழர் நாகரிகம் பண்பாடுகள் பற்றிய ஒரு மதிப்பீடு. "இளமை அழகு முதலியவற்றோடு கூடித் தனித்து வாழாமல் தலைவன் என்ற கொழு கொம்பைப் பற்றியே” வாழும் பெண்மை, பிற உயிர்கள் வருந்தும் போதெல்லாம் தாமும் கரைந்துருகும் தாய்மையாகிய பெண்மை - இவ்விரு தன்மைகளிலும் மேம்பட்டு நிற்கும் வள்ளலாரை அறிமுகப்படுத்துவது ஒரு கட்டுரை (4). - மறைமலையடிகள் காலத்திலெழுந்தோங்கி, இன்றுங்கூட அடிக்கடி கிளப்பிவிடப்படுகின்ற 'தனித்தமிழ் சிக்கல்பற்றிய ஆய்வுரை தருவது ஒரு கட்டுரை (8). "சக்தி வடிவான இவ்வுலகை, மக்களின் சிறு மனத்துக்கு உள்ளவாறு விளக்குவான் வேண்டி இயற்கையன்னையே அவ்வப்போதுள்ள இன்றியமை யாமைக்கேற்றபடி' அனுப்புகின்ற வீரர்களின் சிறப்பியல்புகளை விளக்குவது ஒரு கட்டுரை, (3). "தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரெல்லாம் வீரரே" என்ற இலக்கணத்தோடு தொடங்கும் இக் கட்டுரை, அத்தகைய வீரர் பெருமானாகிய திரு.வி.க.வின் மணிவிழா மலர்க் காணிக்கை. . தற்காலத் தமிழறிஞரிடையே பெருங் கருத்து வேறுபாட்டுப் புயலை எழுப்பிய பேரறிஞர் வையாபுரிப் பிள்ளைபற்றிய மதிப்பீடாக விளங்குவது ஒரு கட்டுரை (12). . . "மிகப் பழையதாய புறநானூற்றில் காணப் பெறும் பல மரபுகள் மிகப் புதியனவாய்க்