பக்கம்:இன்றும் இனியும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ் 97 வந்தது என்று கூறலாமே தவிர, வளர்ந்து வந்தது என்று கூறல் இயலாது. இப் பகுதியில் சிறந்த பெரியார் மூவர் தோன்றினர். குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் என்ற மூவரும் தமிழ்க் கல்வியைப் பழைய நிலைக்குக் கொணரப் பெருமுயற்சி செய்தனர். கம்பநாடர் காலத்திற்குப் பின் தமிழ் பழைய நிலையை அடைய முடியவே இல்லை. சிறந்த கவிஞராய் இருந்தும் குமரகுருபரர், பிள்ளைத் தமிழ், கலம்.திகம், குறம் முதலிய சிற்றிலக்கியங்கள் ஆக்கினாரே தவிரப் பெரிய அளவில் ஒன்றும் செய்ய வில்லை. குமரகுருபரரை ஒத்த பெரும்புலவர் முயன் றிருப்பின், காப்பியம் பாடியிருக்கல்ாம். பிற்காலக் கவிஞர்களுள் அவரை ஒத்த கவிஞரைக் காண்டல் அரிது. எனினும், காப்பியம்பாடும் மரபு அருகி விட்டமையின், அவர் அதில் நுழையவில்லை போலும். காப்பியம் பெற்றிருந்த இடத்தில் ஸ்தல புராணங்கள் புகுந்தன. இவ்வகை இலக்கியங்களில் பரஞ் சோதியார் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், காஞ்சிப் புராணம், தனிகைப்புராணம் என்பவை தவிர, ஏனைய பெயரளவில் கவிதைகளேயாம். இந் நூற்றாண்டுப பகுதியில் இயற்றமிழில் ஒரு புதுமுறை வளர்ச்சி தோன்றலாயிற்று. அதுவே மணிப் பிரவாள நடை எனப்படும். வடமொழியும் தமிழ் மொழியும் கலந்து எழுதுவதே அம்முறை. அம் முறையில் பல நன்மைகளும் தீமைகளும் உண்டு. திவ்விய பிரபந்தங்கட்கு உரையிட்ட பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்களும் அம் முறையைக் கையாண்டு சிறப்படையச் செய்தார்கள், இலக்கண விளக்க ஆசிரியர் போன்ற சில அறிஞர்கள் அம் இ.இ.-7