பக்கம்:இன்றும் இனியும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ல் அ.ச. ஞானசம்பந்தன் முறையின் சிறப்பை அறியாமல் வடமொழியிலிருந்து தமிழ்மொழி பிறந்தது என்று அறியாமையின் எல்லையில் நின்று கூறவும். அஃது இடந்தந்தது. பழைய முறையில் காப்பியம் பாட முயன்ற பெருமை சிவப்பிரகாசர்க்கே உரியது. 'பிரபுலிங்க லீலை நல்ல காப்பியமேயாயினும், மிகச் சிறந்த கவிதைகள் பல அதனுள் இருப்பினும், கால மாறு பாட்டால் அது தலையாய காப்பியங்களுள் வைத்து எண்ணப்படக் கூடாததாய்விட்டது. சிவஞான முனிவர் முற்கூறியவர்களைப் போல்பவர் அல்லர். அவர்கள் கவிஞர்கள், கலைஞர்கள்; ஆனால், திறனாய்வாளர்கள் அல்லர். ஆனால், சிவஞான முனிவர், கவிஞர், திறனாய்வாளர், பேருரையாசிரியர், இலக்கண ஆசிரியர் ஆவார். தமிழ் நாட்டில் மடங்கள் செய்த இரண்டொரு நன்மைகளுள் குமரகுருபரர், சிவஞான முனிவர் போன்ற ஒரு சிலரைப் படைத்தமையும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றமிழ் புதிய முறைகளில் முன்னேறலாயிற்று. மேனாடுகளிலிருந்து சமயம் பரப்பத் தமிழ்நாடு போந்த தொண்டர்களுள் சிலர் புது முறையில் தமிழ் வளர்த்தனர். வீரமா முனிவர், ஜியூ போப்பு, கால்டுவெல் என்பவர்கள் அவர்களுள் முக்கியமானவர்கள். இவர்களால் உரைநடைப் பகுதி வளம் பெறலாயிற்று. இந் நிலையில் இராமலிங்க வள்ளலார், ஆறுமுக நாவலர் போன்ற தமிழ்ப் பெரியார்களும் இயற்றமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தனர். முன்னையோர் கவிதைகளாலும்