பக்கம்:இன்றும் இனியும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ் 99 பின்னையோர் உரைநடையாலும் மொழியை வளர்த்தனர்; பண்பாட்டையும் உடன் வளர்த்தனர். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாயுமான அடிகள் சமரச வழியைப் பெரிதும் போற்றி நூல் செய்தார். 19-ஆம் நூற்றாண்டில் வள்ளலார் அவ்வழியைப் பெரிதும் போற்றிக் கவிதை புனைந்தார். துறவியரான இவர்கள் இருவர் தவிர, இந் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வேதநாயகம் பிள்ளையும் இத்துறையில் பெருந்தொண்டு புரிந்தார். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அவருடைய சீடர் டாக்டர் உ.வே. சாமிநாதையரும் செய்த தொண்டுகள் எண்ணுந் தரத்தனவல்ல. சோழவந்தான் அரசஞ்சண்முகனார். இந் நூற்றாண்டின் ஒப்புயர்வற்ற செல்வம். இருபதாம் நூற்றாண்டில் இயற்றமிழ் மேலும் பல துறைகளில் முன்னேறியது. கவிதைத் துறையில் கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியாரும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும் புதுமுறைக் கவிதைகள் புனைந்து தமிழ்க் கன்னிக்குப் படையல் செய்தனர். இன்று எத்தனையோ இளங்கவிஞர் தொண்டு செய்து வருகின்றனர். உரைநடை, ஆராய்ச்சிப் பகுதிகளுள் ந.மு. வேங்கடசாமி நாட்டார், விபுலானந்த அடிகள், திரு.வி. கலியான சுந்தரனார், கந்தசாமியார், மு. கதிரேசஞ் செட்டியார், இரா. இராகவையங்கார், கா. சுப்பிரமணிய பிள்ளை, வெ.ப. சுப்பிரமணிய முதலியார், டி.கே.சி, போன்ற பெரியவர்கள் தத்தம் துறையில் அளப்பருந்தொண்டு செய்தனர். இன்று நம்மிடையே காணப்பெறாத இவர்கள் தவிர, நம்முடன் வாழும் எத்தனையோ பெரியோர்கள்