பக்கம்:இன்றும் இனியும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 உலகப் பொதுமறை இப் பரந்த உலகில் காலம் இடையிட்டும் தேசம் இடையிட்டும் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் மக்கள் எண்ணிலடங்கார். எத்துணை வேறுபாடான நாகரிகத்தையும், மொழியையும், பண்பாட்டையும் உடையோர் இம் மக்கள். ஆண்டு முழுவதும் பனிக்கட்டியில் வாழும் எஸ்கிமோ இனத்தார் முதல் ஒர் ஆண்டு முழுவதும் ஒரு துளி நீரையும், காணாத பாலை நில மக்கள் வரை அனைவரும் மக்கள் என்ற பொதுப் பெயருள் அடங்குவரேனும் இவர்களுள் எத்துணை வேறுபாடு? தமிழ்நாடு போன்ற ஒரே பகுதியை எடுத்துக் கொண்டாலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோருக்கும் நமக்கும் எத்துணை வேறுபாடுகள் உள்ளன? அவ்வாறு இருக்கவும் உலகில் ஒரு மூலையில், தமிழ் நாட்டில், என்றோ ஒரு நாள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்) தோன்றிய ஒரு நூலை உலகப் பொதுமறை என்று கூறல் பொருந்துமா? இவ்வாறு கூறுவது உண்மை வழக்கா, அன்றி, உபசார வழக்கா? காய்தல் உவத்தல் இன்றி ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். திருக்குறள் ஒரு நீதி நூல் என்றே அனைவரும் கூறுகிறார்கள். எத்துணை இலக்கிய நயம் நிறைந்த