பக்கம்:இன்றும் இனியும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ல் அ.ச. ஞானசம்பந்தன் தாயினும், எத்துணைக் கவிதைச்சிறப்புடையதாயினும் நீதிநூல் நீதிநூல்தானே! அவ்வாறாயின் உலகில் எப் பகுதியிலாவது ஒரு நீதி இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருத்தல் கூடுமா? அப்படியே அந்த ஒரு பகுதியில் அந் நீதி மாற்றமடையாமல் இருந்திருக்கிறது எனக் கொள்ளினும், பல்வேறு நாகரிகமுடைய பல இன மக்கட்கும் அது பொது நீதியாமாறு யாங்கனம்? இவ் வினாக்கள் நியாயமானவையே. இவ் வினாக்கட்கு விடை கூறு முன்னர் நீதி என்று குறிப்பது எதனை என்பதை ஒரு சிறிது ஆராய வேண்டும். தமிழ் மரபில் குறிக்கவேண்டுமானால் மக்கட்குரிய ஒழுக்கத்தைப் புகட்டும் நூல் என்று கூறலாம். மக்கள் ஒழுக்கம் கூறும் நூல் உலகில் வேறு இல்லையா? இருப்பின் அவற்றை உலகப் பொது மறை என்று கூறாமல் இதனைமட்டும் அவ்வாறு கூறக் காரணம் யாது? உலகின் பிற பகுதிகளில் தோன்றிய ஒழுக்க நூல் கட்கும் குறளுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. அந் நூல்கள் தம்கால மக்கள் இனத்தை முழுவதுமாகக் கொண்டு அந்தச் சமுதாயம் செம்மையான நெறியில் வாழ வழி கூறின. பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கெளடில்யர் போன்றோர் இந் நெறி சென்றவர் களேயாவர். சமுதாயம் எவ்வாறு அமையவேண்டும், எவ்வாறு வாழவேண்டும், என்ன குறிக்கோளுடன் இருத்தல்வேண்டும் என்பனபற்றி இந் நூல்கள் கூறின என்பது உண்மைதான். ஆனால், இப் பெருமக்கள், தோப்பில் கவனம் செலுத்தின அளவுக்குத் தனி மரங் களில் கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மையே. சமுதாயம், நாடு என்பவை தனிமனிதர்கள் கூடிய