பக்கம்:இன்றும் இனியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பொதுமறை 103 தொகுப்புத்தாமே. தனிமனிதன் திருந்தினால் சமுதாயமும் நாடும் தாமே திருந்திவிடும். இதன் எதிராகச் சமுதாயச் சீர்திருத்தத்தை மட்டும் பெரிதெனப் போற்றினால் அத்துணைப் பயன் கிடைப்பதில்லை. - மேலும் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற வர்கள் "ரிபப்ளிக்” போன்ற நூல்களை எழுதிய பொழுது கிரேக்கநாட்டுப் பொதுமக்கள் எவ்வாறு இருந்தனர்? இப் பெரியார்கள் வகுத்த ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்கக் கூடிய சமுதாயம் அன்றிருந்ததா எனில் இல்லை என்றே கூறிவிடலாம். பசித்த சிங்கத்திடம் மானிட அடிமைகளைத் துக்கி எறிந்து அவர்களை அவ் விலங்குகள் கடித்துக் குதறித் தின்பதைக் கண்டு கிரேக்க சமுதாயம் கைகொட்டி ஆரவாரித்துக்கொண்டிருந்தது. அந்தத் துர்பாக்கிய சாலிகளான அடிமைகளின் மனைவியர்கள் இக் காட்சியைப் பார்க்குமாறு வற்புறுத்தப்பட்டனர். சாதாரண மக்கள் நிறைந்த சமுதாயம் இந்த நிலையில் இருக்கும் பொழுது அந் நாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள் பயனற்றுப் போவதில் வியப்பு ஒன்றும் இல்லை! - இதன் மறுதலையாகக் குறள் கூறும் ஒழுக்க நெறி அக் காலச் சமுதாய மக்களின் ஒழுக்கத்தை, வாழ்வை, குறிக்கோளைத் தன் ஆணிவேராகத் கொண்டிருந்தது. அதனால்தான் இத்துணைக் காலங் கழித்தும், குறள், என்றும் புதியதாய் இலங்கக் காண்கிறோம். தனி மனிதனுடைய அடிப்படையில் குறள் ஒழுக்கநெறி வகுக்கத் தொடங்கியது. தனிமனித வாழ்வு செம்மைப் பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும் என்ற