பக்கம்:இன்றும் இனியும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அ.ச. ஞானசம்பந்தன் உறுதியுடன் குறள் வழி வகுக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் வாழும் ஒருவகைச் சமுதாயம் முழுவதற்கும் சட்டம் வகுத்தால், காலம் மாறும் பொழுதும் அதனால் அச் சமுதாயம் மாறும் பொழுதும் அச் சட்டமும் ஓரளவு பயனற்றுப்போம். ஒருவகைச் சமுதாயத்திற்கு இயற்றப்பெற்ற சட்டம் அல்லது ஒழுக்க நெறி பிறிதொரு சமுதாயத்திற்கு ஏலாமலும் போய்விடுகிறது. தனிமனிதனுடைய ஒழுக்க நெறியை அடிப்படை யாகக் கொண்டால் ஏறத்தாழ உலக முழுவதற்கும் ஒரு பொதுத் தன்மையை வகுத்துவிடலாம். தனிமனித வாழ்விலும், மாறும் அறம் என்றும் மாறா அடிப்படை அறம் என்றும் இரண்டு உண்டு. மாறும் அறநெறி கால, தேச, வர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டதாகும். ஆனால், அடிப்படையானவும் மாறாதனவுமான சில அறவழிகளும் உண்டல்லவா? ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் தம் சூழ்நிலை, தட்ப வெப்ப நிலை, சுற்றுப்புற உயிர்கள் என்பவற்றிற்கு ஏற்பச் சில ஒழுகலாறுகளைக் கடைப்பிடிப்பர். இந்த ஒழுகலாறு. கள் ஒரே நாட்டில் கூடக்கால மாறுபாட்டால் மாறும் இயல்புடையன; ஒரே காலத்தில்கூட இடவேறுபாடு களால் மாறும் இயல்பு முடையன; ஒரே காலத்தில் ஒரே நாட்டின் இரு வேறு மூலைகளிலும்கூட மாறுபடும் இயல்புடையன. இத்தகைய ஒழுகலாறுகளே மாறும் அறங்கள் எனப்பெறும், உதாரணமாகத் தண்ணீர்ப் பந்தல் வைப்பது பொதுவாக ஒரு காலத்தில் அறமெனக் கருதப் பெறினும் இன்று அது தேவையற்றதாகும். இந் நாட்டில் அதனை அறமென்று கருதிய பழைய காலத்தில்கூட வட நாட்டில் குளில் நிறைந்த பிரதேசத்தில் அது