பக்கம்:இன்றும் இனியும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பொதுமறை 105 அறமாகக் கருதப்படவில்லை. எனவே, ஒரு காலத்தில் ஓர் இடத்தில் அறமெனக் கருதப் பெற்ற ஒன்று பிறிதொரு காலத்தில் அதே இடத்தில்கூட அறமெனப் படுவதில்லை. இதனையே மாறும் அறமெனக் கூறுகிறோம். . - இதன் எதிராக, மனத்தில் யாதொரு குற்றமும் இல்லாமல் வாழ முற்படுதல், பிறரிடம் அழுக்காறு கொள்ளாதிருத்தல், சினங்கொள்ளாதிருத்தல் என்பவை என்றும் எக்காலத்தும் மாறா அறங்கள். குறளின் தனிச் சிறப்பு யாதெனில் மாறாத இந்த அடிப்படை அறநெறியை வளர்க்க முற்பட்டதே யாகும். x அறமாவது யாது என்ற வினாவிற்கு முதற்கண் கூறியபடி மாறும் அறத்தின் அடிப்படையிலும் விடை கூறலாம். ஆனால், அவ்வாறு கூறப்பெற்ற விடை எக்காலத்தும் பொருந்தும் என்று கூறல் இயலாது. இதன் எதிராக மாறாத அடிப்படை அறத்தின் அடிப்படையிலும் விடை கூறலாம். அவ்வாறு கூறப் பெற்றால் அந்த விடையே எக்காலத்துக்கும் பொருத்த முடையதாக இருக்கும். அறமாவது யாது என்ற வினாவிற்குக் குறள் கூறும் விடை இரண்டாவது வகையைச் சேர்ந்தது. - 'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்' . (குறள், 34) 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (குறள், 49) 'அறத்தான் வருவதே இன்பம்' (குறள், 39)