பக்கம்:இன்றும் இனியும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அ.ச. ஞானசம்பந்தன் இத்தகைய தொடர்களால் வள்ளுவர் கண்ட அறம் எத்தகையது என்பது ஒருவாறு விளங்கும், ஒருவன் அறவாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமானால் அஃது அவனுடைய மனத்தையே பொறுத்தது. புறவாழ்க்கையில் அறவாழ்வை மேற்கொள்வதும் சமுதாயத்தில் அறவாழ்வை மேற்கொள்வதும் மனத் துக்கண் மாசிருப்பின் பயனற்றுப் போய்விடும். அவை இரண்டும் நன்கு துலங்கவேண்டுமாயின் மனத்துக்கண் மாசின்றாகவேண்டும். மாசு நிறைந்த மனத்துடன் புறத்தேமட்டும் அறவாழ்வு தொடங்கினால் அது வேர் இல்லாத மரம் போல் அழிந்துவிடும். அன்றியும் அதன் வலுவின்மையைப் பிறர் அறிய முடியாமல் போவதோடு, வலுவுடையதென்று தவறாக எண்ணவும் நேரிடும். இன்றைய மக்களிற் பெரும் பாலோர் இத்தகைய வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இறைவனுக்குத் தொண்டு செய்யவேண்டு மென்ற கருத்தில் திருக்கோயிலுக்கு விளக்கிடுபவர்கள், படி செய்து வைப்பவர்கள் ஆகியோர் அவற்றிற்கு ஆகும் செலவில் ஒரு செம்பாதியை அது யாருடைய தருமம் என்று அறிவிப்பதில் செலவிடுகின்றனர். இதனை மனத்துட்கொண்டே ஆசிரியர் இத்தகைய அறங்களை ஆகுல நீர பிற (ஆரவாரமான தன்மை யுடையன என்று கூறுகிறார். தனிப்பட்ட ஒருவரை விளித்து இவ்வாறு இந் நீதி பேசப்படுகிறது. ஒரு சமுதாயத்தில் வாழ்பவர் அனைவருமே மனத்துக்கண் மாசில்லாதவர்களாய் வாழப்புகுந்தால் அச் சமுதாயத்திற்கென்று தனிப்பட்ட அறநெறி வகுக்கத் தேவை இன்றாய் முடியும். இத்தகைய ஒர் ஒழுகலாறு அல்லது நீதிமுறை அனைத்துலகத்திற்கும்